— ஜெயகுமாரன், சென்னை.
வரலாறு என்பது வாழ்ந்த கதை மட்டுமல்ல. அதுவோர் இனத்தின் வாழ்வியற் படிமங்களையும் அதன் விழுமியங்களையும் மீட்டெடுப்பதாகும். வரலாற்றின் பதிவுகள் இருக்கும் வரை, அது அச்சமூகத்தை அடுத்த நகர்வுக்கு க டத்திக்கொண்டே இருக்கும். தமிழின் த தொன்மச் சான்றுகளைப் பொறுத்தமட்டில், ஈராயிரம் ஆண்டு வாழ்வியலைக் கூ றும் இலக்கியங்களும், வெளிநாட்டவரின் குறிப்புகளும், கட்டுமான உச்சமாக கற்கோவில்களும் குடைவரை கோவில்களும் நம்மிடைய இருந்தன. இருந்தாலும் அவை கூறும் தமிழரின் வாழ்வியற்கூறுகள் தமிழ்நாட்டிலோ ஈழத்திலோ அறியப்படவேயில்லை. ஆய்வுகள்தோறும் ஈமச்சின்னங்களான முதுமக்கள் தாழிகளும், கல்திட்டைகளும், கல்பதுகைகளுமே பெருமளவில் கிடைத்தன. பல்வேறு இலக்கியங்களில் கூறப்படும் மன்னர்களின் அரண்மனைகள் கூடக் கிடைக்கவில்லை[…]
பெட்னா மலர்-2017, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, ஜூலை 2017, www.fetna.org