Home Article கீழடி ஆய்வும் அதன் காலக் கணிப்பு முறையும்

கீழடி ஆய்வும் அதன் காலக் கணிப்பு முறையும்

by Tamil Heritage Foundation
0 comment
— நூ.த.லோக சுந்தரம்
கீழடி அகழாய்வில் கண்ட பொருட்களைக்கொண்டு அங்கு வாழ்ந்தோரின் நாகரீக காலம் கணிக்க வேண்டும் என்றபோது அங்குக் கிட்டிய பொருள்களில் காணும்  கரிம பொருட்களை க் கொண்டு கணிக்க “ரேடியோ கார்பன்” (கதிரியக்கக் கரிமம் 14) எனும் வழி முறை உள்ளதை அறிவோம்.   அதன்  விளக்கத்தை விக்கிப்பீடியாவில்  காணலாம் (en.wikipedia.org/wiki/Radiocarbon_dating).
கரி அணுக்களில் கரிமம் 14 என்பது கதிர் இயக்கம் வெளிவிடும்  இயல்பினது. ஓர்  வளரும் பொருள் (அதாவது, கரிமப்பொருள்) இவ்வகை கரியம்  14  (கோடியில் ஓரிரு) அணுக்களையும் சேர்ந்து  வளர்ந்துவிடும் எனும் உண்மையைக்கொண்டும்,  இப்போது  அந்த கருமப்  பொருளில் கரிமம் 14 எனும் அணு வகையைச் சார்ந்த அணுக்களிருந்து வெளிவரும்  கதிரியக்கம்  நொந்து போகும் அளவினை அளந்து அதன் இப்போதைய காலம் தெரிய வரும். அதனால் அகழாய்வினில் கண்ட பொருளின் காலம் கணிக்கப்படும்.
சுடுமண் சார்ந்த பானை  ஓடு போன்ற கரிமம் அல்லாத  பொருட்களுக்கு “சுட்டு ஒளிர் நோக்கல்” (தெர்மோலுமினேசசென்ஸ் / Thermoluminescence) எனும் முறை உள்ளது. இதனைப்பற்றிய விவரங்களுடன் அவ்வகை சிறப்புமுறை ஆய்வு மேற்கொள்ளக்கூடிய ஓர் வாணிபவகை நிறுவனமாகும். காணலாம் (www.oxfordauthentication.com/about-us/the-laboratory-and-the-tl-testing-process/).
இதனில் சுடுமண் சார்ந்த பொருள்களின் ஊடே காணும் கதிரியக்க அளவினைக்கொண்டே அப்பொருளின் காலம் கணிக்கப்படுமாம்.
முன்பு முதுசொம் ( தமிழ் மரபு அறக்கட்டளை / Tamil Heritage Foundation ) வலைத்தளங்களில் மறைந்துள்ள நொய்யலாற்றுப்படுகை ஓடுகள் போரூர் மடாலயத்திலிருந்து பெற்றவை  பற்றிய  ஆய்வு  நோக்கும் முயல்வினில் தேடியபோது இந்தியாவில் நாகாலாந்து பல்கலைக்கழகத்தில் இதற்கான‘தெர்மோலுமினேசசென்ஸ்’ ஆய்வுக்கூடம் இருப்பதை நான் கண்டு குறித்தது   நினைவில் வருகின்றது
மற்றொன்றும் உள்ளது இதற்கு ‘ஆக்டிவேஷன்  அனாலிசிஸ்’ (Avation analysis) இதுவும் கதிரியக்க காலக்  கணிப்பு  வகையைச் சார்ந்ததே. இதனைக்கொண்டு ஒரு பொருளில் காணும் வெவ்வேறு வகை மூலகங்கள் (அணுக்கள் ) எத்தனை சத்தம் உள்ளது என்பதைக் கணிக்க முடியும்.  இதனைக் கொண்டு கண்ட பொருட்களில்  இவை இவை  பொருள்  ஒரே இடம் சார்ந்தது / அல்லாதது என வேறுபாடு கணிக்க முடியும்.
இந்த ‘ஆக்டிவேஷன்  அனாலிசிஸ்’ கொண்டுதான் நெப்போலியன் போனபார்ட் எனும் பிரஞ்சு நாடாண்டவன் எப்படி ஆர்சினிக்கு எனும் விஷப்பொருளை சிறிது சிறிதாக உணவில் கலந்து பிரிட்டிஷாரால்  கொல்லப் பட்டார்  எனும் உண்மை  அவரின் பாதுகாக்கப்பட்ட மயிர்க்கற்றையில்  கண்ட ஆர்ஸினுக்கு எனும் மாழை ஒத்த அணுவின் அளவினால் கண்டுபிடித்தனர்.
கீழ்க் காணும் இந்தச் செய்தியில் முன்பே காலம் காட்டும் பண்புகளுடன்  கண்ட பானைஓடுகளில் காணும் இரும்பு அணுக்களின் தன்மையினைக்கொண்டு இப்புவியில் புவியீர்ப்பு ஆற்றல் எப்படியெல்லாம் மாறி வந்துள்ளது என்பதை காண்கின்றனராம்.
________________________________
ANCIENT POTTERY RECORDED GEOMAGNETIC FIELD FLUCTUATIONS
Monday, February 13
TEL AVIV, ISRAEL—Live Science reports that Erez Ben-Yosef of Tel Aviv University and his colleagues measured fluctuations in the strength of the Earth’s magnetic field using a collection of pottery jugs dating to between the eighth and second centuries B.C. The jugs were marked some 2,500 years ago with administrative stamps by the bureaucracy of the kingdom of Judah, and then fired. The heat locked information regarding the Earth’s geomagnetic field into the iron-containing minerals in the clay, while the stamps provide precise dates. The study suggests that in the Levant, the strength of the magnetic field “fluctuates quite rapidly,” but because the precise locations of where the pottery was fired are not known, the scientists can’t determine the direction of the geomagnetic field based on it. The research could help lead to a system of dating heated materials based upon their magnetic properties. For more on archaeology of the kingdom of Judah, go to “Cults of the Bronze Age.”
www.archaeology.org/news?page=2
படங்கள்: இணையத்திலிருந்து

________________________________________________________

நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
[email protected]
________________________________________________________

You may also like

Leave a Comment